கஞ்சா விற்ற 2 பேர் கைது
மன்னார்குடியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்
திருவாரூர்
மன்னார்குடி;
மன்னார்குடி- மதுக்கூர் ரோடு 6-ம் நம்பர் வாய்க்கால் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மன்னார்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் 6-ம் நம்பர் வாய்க்கால் பகுதியை சேர்ந்த பரணிதரன்(வயது24), மன்னார்குடி 4-ம் சேத்தி பகுதியை சேர்ந்த சச்சின் (23) என்றும் அவர்கள் கஞ்சா விற்றதும் ெதரியவந்தது. இதைத்தொடர்ந்து பரணிதரன், சச்சின் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்கள் பதுக்கி வைத்திருந்த ஆயிரத்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story