கோவில் நிலத்தில் சடலங்களை புதைக்க அனுமதிக்க முடியாது - மதுரை ஐகோர்ட்டு அதிரடி...!


கோவில் நிலத்தில் சடலங்களை புதைக்க அனுமதிக்க முடியாது - மதுரை ஐகோர்ட்டு அதிரடி...!
x

கோவில் நிலத்தில் சடலங்களை புதைக்க அனுமதிக்க முடியாது என மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

மதுரை,

திருச்செந்தூரைச் சேர்ந்த எஸ்.பி.நாராயணன் என்பவர், திருச்செந்தூர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் இறந்தவர்களின் சடலங்கள் புதைக்கப்படுவதை தடுக்கக் கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்தார். இந்த மனு மதுரை ஐகோர்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கோவில் நிலத்தில் சடலங்களை புதைக்க அனுமதிக்க முடியாது. இந்த விவகாரத்தில் 3 மாதத்தில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story