நாமக்கல்லில்வங்கி ஊழியர் சம்மேளனத்தினர் வாகன பிரசாரம்


நாமக்கல்லில்வங்கி ஊழியர் சம்மேளனத்தினர் வாகன பிரசாரம்
x
தினத்தந்தி 23 July 2023 12:30 AM IST (Updated: 23 July 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் சார்பில் வங்கிகளை பாதுகாப்போம், தேசத்தை பாதுகாப்போம் என்ற முழக்கத்தோடு தமிழகம் முழுவதும் 4 ஆயிரம் கி.மீட்டர் வாகன பிரசாரம் நடக்கிறது. இந்த பிரசார குழுவினர் நேற்று நாமக்கல் வந்தனர். இவர்களுக்கு பூங்கா சாலையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார்.

பொதுத்துறை, கூட்டுறவு, கிராம வங்கிகளை பாதுகாக்க வேண்டும். மக்களின் சேமிப்பிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், தேவையான ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும். வங்கி பணிகளை வெளியாட்களுக்கு விடுவதை கைவிட வேண்டும். தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் வங்கி ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் ராஜேந்திரன், கோவை மாவட்ட தலைவர் சிவலிங்கம், சி.ஐ.டி.யு. நாமக்கல் மாவட்ட செயலாளர் வேலுச்சாமி, இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story