வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மண்எண்ணெய் கேனுடன் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்த பொதுமக்கள்- கோபியில் பரபரப்பு

கோபியில் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மண்எண்ணெய் கேனுடன் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடத்தூர்
கோபியில் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மண்எண்ணெய் கேனுடன் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோர்ட்டு தீர்ப்பு
கோபி நகராட்சிக்குட்பட்ட சக்தி நகரில் நத்தம் புறம்போக்கு நிலத்தில் சுமார் 60 ஆண்டுகளாக 13 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2001-ம் ஆண்டு வருவாய்த்துறை அதிகாரிகள் பட்டா வழங்கினர். இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் 13 வீடுகள் உள்ள நிலம் தனக்கு சொந்தமானது என்று கூறி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. இதையடுத்து நிலத்துக்கு சொந்தக்காரர் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்ற முயன்றார்.
மயங்கி விழுந்த பெண்
வீடுகளை இடிக்க 13 குடுcaptivityம்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்தனர். மேலும் கைகளில் மண்எண்ணெய் கேனை வைத்துக்கொண்டு எங்களை மீறி வீடுகளை இடித்தால் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொள்வோம் என்று மிரட்டல் விடுத்தனர். அப்போது போராட்டம் நடத்திய பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களின் போராட்டத்தை அடுத்து வீடுகளை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.






