மூங்கில்துறைப்பட்டு அருகே விவசாய நிலத்துக்குள் பாய்ந்த கார்


மூங்கில்துறைப்பட்டு அருகே  விவசாய நிலத்துக்குள் பாய்ந்த கார்
x

மூங்கில்துறைப்பட்டு அருகே விவசாய நிலத்துக்குள் காா் பாய்ந்து விபத்தில் சிக்கியது.

கள்ளக்குறிச்சி


மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைபட்டு அருகே உள்ள புதூர் கூட்டு சாலையில் இருந்து சேராப்பட்டு நோக்கி நேற்று முன்தினம் இரவு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கார் புதூரில் சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பு கற்களை உடைத்துக்கொண்டு அருகில் இருந்த விவசாய நிலத்துக்குள் பாய்ந்து, விபத்தில் சிக்கியது.

இதற்கிடையே விபத்து பற்றி அறிந்த வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால், காரில் வந்த யாரும் அங்கு இல்லை. இதன் மூலம் காரில் வந்தவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றி தெரியவில்லை. மேலும் காரில் வந்தவர்கள் காயமடைந்து எந்த ஆஸ்பத்திரியல் உள்ளனர் என்கிற விவரமும் போலீசாருக்கு தெரியவில்லை.

எனவே காரை யாரேனும் திருடும் வகையில் ஓட்டி சென்றார்களா?, இந்த கார் யாருக்கு சொந்தமானது? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story