சாலையோர தடுப்பு கம்பியில் கார் மோதியது; 4 பேர் படுகாயம்
வேடசந்தூர் அருகே சாலையோர தடுப்பு கம்பியில் கார் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
திண்டுக்கல்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சிலர், கேரள மாநிலம் சபரிமலைக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து காரில் சித்தூருக்கு திரும்பி சென்று ெகாண்டிருந்தனர். அந்த காரை நவீன் (வயது 27) என்பவர் ஓட்டினார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தம்மனம்பட்டி பகுதியில் நான்கு வழிச்சாலையில் இன்று அதிகாலை அவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த தடுப்பு கம்பியில் மோதியது. இதில், காரில் வந்த டிரைவர் நவீன், விஜயகுமார் (40), 2 சிறுமிகள் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story