கூடலூரில் கார் விபத்து
கூடலூரில் கார் நடைபாதையில் புகுந்து விபத்துக்குள்ளானது.
நீலகிரி
கூடலூர்
கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு சுற்றுலா செல்கின்றனர். பின்னர் மீண்டும் ஊருக்கு திரும்பி செல்லும் போது வாகனங்களை ஓட்டிச் செல்வதில் போதிய கவனம் செலுத்துவதில்லை. இதனால் கட்டுப்பாட்டை இழக்கும் வாகனங்கள் கூடலூர் நகரில் விபத்துக்குள்ளாகி வருகிறது. நேற்று முன்தினம் கேரள பதிவு எண் கொண்ட கார் ஊட்டியில் இருந்து கூடலூர் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பழைய பஸ் நிலையம் அருகே உள்ள நடைபாதையில் இரும்பு கம்பிகளை உடைத்துக்கொண்டு புகுந்தது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடமாக இருந்தாலும், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து கூடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story