ஆட்டோ மீது கார் மோதி 2 பேர் காயம்


ஆட்டோ மீது கார் மோதி 2 பேர் காயம்
x

ஆட்டோ மீது கார் மோதி 2 பேர் காயம் அடைந்தனர்.

திருப்பத்தூர்

வேலூரில் இருந்து பெங்களூரு நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சின்ன கொமேஸ்வரம் நெடுஞ்சாலையில் சென்ற போது, முன்னால் தக்காளி ஏற்றிச்சென்ற ஆட்டோ மீது கார் மோதியது. இதில் கார் மற்றும் ஆட்டோ தலை குப்புற கவிழ்ந்து.

இந்த விபத்தில் கார் டிரைவர் மற்றும் ஆட்டோ டிரைவர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story