மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பலி


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பலி
x

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பலியானார்.

புதுக்கோட்டை

கீரனூர் அருகே உள்ள வாலியம்பட்டியை சேர்ந்தவர் தண்டாயுதபாணி (வயது 45), முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் கூத்தாடி பாறை அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த தண்டாயுதபாணியை அப்பகுதி மக்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய திருச்சியை சேர்ந்த வேலுச்சாமி (62) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story