மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலி


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலி
x

வேப்பந்தட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலியானார்.

பெரம்பலூர்

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் வசித்து வருபவர் ஆனந்த ஜோதி (வயது 48), தொழிலாளி. இவர் தனது சொந்த ஊரான பெரம்பலூர் அருகே உள்ள மேலப்புலியூருக்கு வந்துவிட்டு மீண்டும் வால்பாறை நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் நேற்று சென்று கொண்டு இருந்தார். பெரம்பலூர்-ஆத்தூர் நெடுஞ்சாலையில் உள்ள கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனை அருகே சென்றபோது எதிரே ஆத்தூரில் இருந்து பெரம்பலூர் நோக்கி வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஆனந்த ஜோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த சேலம் மாவட்டம் எருமாபாளையத்தை சேர்ந்த நாகராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story