கார் மோதி மின்கம்பம் சேதம்


கார் மோதி மின்கம்பம் சேதம்
x

கார் மோதி மின்கம்பம் சேதமடைந்தது.

திருச்சி

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே வ.உ.சி. சாலையில் நேற்று மாலை கார் ஒன்று வேகமாக சென்றது. அந்த கார் திடீரென சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கி சேதம் அடைந்தது. காரை ஓட்டி வந்த நபர் காயம் அடைந்தார். மேலும், மோதிய வேகத்தில் மின் கம்பம் சாய்ந்து மின்கம்பிகள் சாலையில் விழுந்து கிடந்தன. இதைக்கண்ட அந்த பகுதியினர் காயத்துடன் இருந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் அந்த பகுதியில் மின்சார இணைப்பை துண்டித்தனர். மேலும், சாய்ந்து கிடந்த மின்கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே சம்பவ இடத்துக்கு வந்த தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

1 More update

Next Story