கார் மோதி வாலிபர் பலி


கார் மோதி வாலிபர் பலி
x

கார் மோதி வாலிபர் பலியானார்.

அரியலூர்

செந்துறை

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கல்லை கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 36). இவர் ஆண்டிமடம் பகுதியில் உள்ள உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு அங்கிருந்து செந்துறை நோக்கி வந்துள்ளார். அவர் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருதூர் கிராமத்தில் வந்து கொண்டிருந்தபோது மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த கார் ஒன்று ஜெயங்கொண்டம் நோக்கி வந்தது. அப்போது காரும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் ரவிச்சந்திரன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து தகவலறிந்த செந்துறை போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story