சைக்கிள் மீது கார் மோதி விபத்து


சைக்கிள் மீது கார் மோதி விபத்து
x

சைக்கிள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

கரூர்

தோகைமலை அருகே உள்ள கழுகூரை சேர்ந்தவர் கருப்பன் (வயது 55). இவர் கடந்த 26-ந்தேதி தனது சைக்கிளில் மணப்பாறை-குளித்தலை செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக திருப்பூர் மாவட்டம் மன்னாரி செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் ஓட்டி வந்த கார் கருப்பன் ஓட்டி வந்த சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கருப்பன் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story