பஸ் மீது கார் மோதல்; முன்னாள் அமைச்சரின் தம்பி-மகன் காயம்


பஸ் மீது கார் மோதல்; முன்னாள் அமைச்சரின் தம்பி-மகன் காயம்
x

பஸ் மீது கார் மோதல்; முன்னாள் அமைச்சரின் தம்பி-மகன் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை

விராலிமலை தாலுகா நம்பம்பட்டியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவர் நேற்று சொந்த வேலை காரணமாக தனது காரில் தனது மகன் அருணுடன் வெளியே சென்று விட்டு மீண்டும் அதே காரில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். காரை அருண் ஓட்டினார். இந்நிலையில் கார் நம்பபட்டி அருகே வந்த போது எதிரே மணப்பாறையில் இருந்து விராலிமலை நோக்கி வந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக அருண் ஓட்டி வந்த கார் மீது மோதியது. இதில், தமிழ்ச்செல்வன் மற்றும் அருண் ஆகியோர் காயமடைந்தனர். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்ைசக்காக மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்ச்செல்வன் என்பவர் அ.தி.மு.க. ஆட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த சுப்பிரமணியன் என்பவரின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story