மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 2 பேர் படுகாயம்


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 2 பேர் படுகாயம்
x

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 2 பேர் படுகாயமடைந்தனர்.

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை அருகே வேம்பன் பட்டியை சேர்ந்தவர் பேச்சிமுத்து மகன் வெள்ளைச்சாமி (வயது 30). ஜெயராமன் மகன் லட்சுமணன் (27). இவர்கள் இருவரும், மோட்டார் சைக்கிளில் கந்தர்வகோட்டையில் இருந்து வேம்பன் பட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, பட்டுக்கோட்டையில் இருந்து கீரனூர் நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வெள்ளைச்சாமி, லட்சுமணன் ஆகிய 2 பேரும் படுகாயம டைந்தனர். இதில், மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோல் கசிந்து மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும், மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதற்கிடைேய படுகாயமடைந்த வெள்ளைச்சாமி, லட்சுமணன் ஆகிய 2 பேரும் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காரை ஓட்டி வந்த கீரனூர் பாலகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர் மீது கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story