மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 2 வாலிபர்கள் படுகாயம்


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 2 வாலிபர்கள் படுகாயம்
x

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கரடிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவருடைய மகன் மனோஜ் (வயது 19). இவர் தனது நண்பரான கிருஷ்ணசாமி மகன் சேனாபதியுடன் (19) மோட்டார் சைக்கிளில் கும்பகோணம் சாலையில் சென்று கொண்டிருந்தார். கழுவந்தோண்டி பாலம் அருகே சென்றபோது எதிரே ஜெயங்கொண்டம் நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மனோஜ், சேனாபதி ஆகியோரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story