மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 4 பேர் படுகாயம்


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 4 பேர் படுகாயம்
x

புன்னம்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

கரூர்

விபத்து

கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால் மகன் அசோக் குமார்(வயது 38). இவர் கரூர்- வெண்ணைமலையில் இருந்த அவரது மனைவி சத்யாவை(36) அழைத்து வருவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் ஈரோடு-கரூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது புன்னம் சத்திரம் அருகே குட்டைக்கடை பகுதியில் உள்ள தார் பிளாண்ட் அருகில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் காரில் அதிவேகமாக வந்த ஈரோடு கள்ளுக்கடை மேடு சீனிவாசன் தெருவை சேர்ந்த அருள்மணி என்பவரது மகன் விஜய்ஆதித்தன் என்பவர் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற அசோக்குமார் மீது மோதினார். இதில் அசோக்குமார் நிலைத்தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கார் மீது விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில் காரை ஓட்டி வந்த விஜய் ஆதித்தன் காரை திடீரென பிரேக் போட்டுள்ளார்.

4 பேர் படுகாயம்

அப்போது காரில் அமர்ந்திருந்த விஜய் ஆதித்தனின் உறவினர்கள் தேவேந்திரன்(65), இந்துமதி(56) விஜய் ஆதித்தனின் தாய் சித்ரா(55) ஆகியோருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து ஆம்புலன்ஸை வரவழைத்து 4 பேரையும் மீட்டு கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் தேவேந்திரனை மட்டும் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மற்ற 3 பேரையும் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அசோக்குமாரின் மனைவி சத்யா வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் காரை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய விஜய்ஆதித்தன் மீது வழக்குப்பதிவு செய்து காரை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story