மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; மாட்டு வியாபாரி பலி
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் மாட்டு வியாபாரி பலியானார்.
பெரம்பலூர்
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் தீரன் நகர் அருகே நேற்று இரவு சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது அந்த வழியாக வந்த கார் ஒன்று மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற விளாமுத்தூர் கிராமத்தை சேர்ந்த மாட்டு வியாபாரி ராமச்சந்திரன் (வயது 55) என்பவர் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மோதிய வேகத்தில் காரும் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரில் பயணம் செய்தவர்களில் 4 பேர் படுகாயமடைந்தனர். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவலறிந்து சென்ற பெரம்பலூர் போலீசார் ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story