மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; விவசாயி பலி
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; விவசாயி பலியானார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை ராஜாகோபாலபுரம் வட்டாபட்டியை சேர்ந்தவர் வடிவேலு (வயது 53). விவசாயி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் அன்னவாசல் அருகே உள்ள கடையப்பட்டி பகுதியில் உள்ள அவரது தோட்டத்திற்கு சென்றுள்ளார். பின்னர் அங்கு வேலை முடித்த நிலையில் மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். பொன்னமராவதி-பெருமநாடு சாலையில் வந்தபோது எதிரே வந்த கார் வடிவேலு ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் வடிவேலு படுகாயமடைந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வடிவேலு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை நிறுத்தி விட்டு தப்பியோடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story