மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; டெய்லர் படுகாயம்


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; டெய்லர் படுகாயம்
x

ஆலங்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் டெய்லர் படுகாயம் அடைந்தார்.

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே உள்ள பனங்குளம் பகுதியை சேர்ந்தவர் திருமாறன் (வயது 45), டெய்லர். இவர் காசிம் புதுப்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சிலத்தூர் மாளிகை புஞ்சை பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (35) என்பவர் ஓட்டி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட திருமாறன் படுகாயம் அடைந்து சாலையில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து கீரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சை வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான செந்தில்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story