மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; டெய்லர் பலி


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; டெய்லர் பலி
x

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; டெய்லர் பலியானார்.

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே பனங்குளத்தை சேர்ந்தவர் திருமாறன் (வயது 45). டெய்லர். இவர், மோட்டார் சைக்கிளில் காசிம்புதுப்பேட்டை பஸ் நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே சிலத்தூர் மாளிகை புஞ்சை பகுதியை சேர்ந்த ராசு மகன் செந்தில்குமார் (35) என்பவர் ஓட்டி வந்த கார், எதிர்பாராதவிதமாக திருமாறன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திருமாறன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருமாறன் மனைவி ரதி (38) கொடுத்த புகாரின் பேரில், கீரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story