மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; என்ஜினீயர் பலி


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்;  என்ஜினீயர் பலி
x

கன்னியாகுமரி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த நண்பருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

கன்னியாகுமரி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த நண்பருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்த விவரம் வருமாறு:-

என்ஜினீயர்

கன்னியாகுமரி அருகே உள்ள ஏழுசாட்டுபத்து கிராமத்தை சேர்ந்தவர் பால்துரை. இவருடைய மகன் வருண் (வயது 27), என்ஜினீயர். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

நேற்று முன்தினம் இரவு வருணும், அதே ஊரை சேர்ந்த நண்பர் சித்தாந்த் (19) என்பவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பில் இருந்து கன்னியாகுமரிக்கு 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை வருண் ஓட்டி சென்றார். சித்தாந்த் பின்னால் அமர்ந்திருந்தார். அவர்கள் அகஸ்தீஸ்வரத்துக்கு செல்லும் சாலையில் உள்ள திருப்பத்தில் வந்தபோது, பின்னால் வந்து ெகாண்டிருந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

பரிதாப சாவு

இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற நண்பர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தில் நின்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே வருண் பரிதாபமாக இறந்தார். சித்தாந்துக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story