கார் மோதி 2 பேர் பலி


கார் மோதி 2 பேர் பலி
x

சின்னசேலத்தில் கார் மோதி 2 பேர் பலியானாா்கள்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்:

சின்னசேலம் அருகே உள்ள கல்லாநத்தம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 64). விவசாயி, இவரும், இதே ஊரைச் சேர்ந்த மாயக்கண்ணன் (50) என்பவரும் மொபட்டில் சின்னசேலத்தில் இருந்து கள்ளகுறிச்சி நோக்கி சென்றனர். சின்னசேலம் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள சர்வீஸ் ரோட்டில் இருந்து சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்தபோது, சென்னையில் இருந்து சேலம் மார்க்கமாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் 2 பேரும் பலியானார்கள். இது தொடர்பாக சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story