ஓமலூர் அருகே, அய்யப்ப பக்தர்கள் சென்ற கார் மரத்தில் மோதி விபத்து ஒருவர் காயம்; 6 பேர் காயமின்றி தப்பினர்
ஓமலூர் அருகே, அய்யப்ப பக்தர்கள் சென்ற கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் காயம்; 6 பேர் காயமின்றி தப்பினர்
சேலம்
ஓமலூர்,
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த 9 வயது சிறுமி உள்பட 7 அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு காரில் சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். ஓமலூரை அடுத்த சிக்கனம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது காரின் டயர் திடீரென வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி தலைகுப்புற நின்றது. இந்த விபத்தில் ஒரு பக்தருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. சிறுமி உள்பட மற்ற 6 பேரும் காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story