மின்கம்பம் மீது கார் மோதல்


மின்கம்பம் மீது கார் மோதல்
x

மின்கம்பம் மீது கார் மோதியது.

திருச்சி

திருப்பட்டூரிலிருந்து ஆத்தூர் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த கார் உப்பிலியபுரம் அருகே கொப்பம்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக அந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் மின் கம்பம் 3 துண்டுகளாக உடைந்தது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரில் வந்தவர்கள் காயமின்றி உயிர்தப்பினர். தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாற்று மின்கம்பத்தை நட்டு சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story