மின்கம்பம் விழுந்து கார் சேதம்


மின்கம்பம் விழுந்து கார் சேதம்
x
திருப்பூர்


திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் நேற்று மின்பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. அப்ேபாது கொங்கு மெயின் ரோடு முதல் ரெயில்வே கேட் அருகே மின்கம்பிகளுக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகளை அகற்றும் பணியில் மின்ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்ேபாது எதிர்பாராத விதமாக மரக்கிளையை அகற்றும்போது மரக்கிளை மின்கம்பம் மீது விழுந்து மின்கம்பம் சாய்ந்து சாலையில் நின்றுகொண்டிருந்த காரின் மீது விழுந்தது. இச்சம்பவத்தில் காரின் முகப்பு கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. நல்வாய்ப்பாக காரில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, பராமாிப்பு பணியில் ஈடுபடும் மின் ஊழியர்கள் சுற்றுப்புற சூழல் எவ்வாறு உள்ளது என்பதை கவனித்து பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினர்.

1 More update

Next Story