கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
கோவில்பட்டியில் கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கிருஷ்ணா நகர் மெயின் தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவருடைய மகன் மூர்த்தி (வயது 45). இவர் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று மாலையில் இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த், சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அங்கு வீட்டில் மூர்த்தி தூக்கில் பிணமாக தூங்கியது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மூர்த்திக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் வீட்டில் இல்லை. குடும்பத் தகராறு காரணமாக அவர்கள் பெற்றோர் வீட்டிற்கு சென்றார்களா? தற்கொலைக்கு என்ன காரணம்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.