கோடநாடு கொலை வழக்கு விபத்தில் பலியான கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் ரூ.1 கோடி மோசடி வழக்கில் கைது


கோடநாடு கொலை வழக்கு விபத்தில் பலியான கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் ரூ.1 கோடி மோசடி வழக்கில் கைது
x

மேச்சேரி அருகே ரூ.1 கோடி நில மோசடி வழக்கில், கோடநாடு கொலை வழக்கை அடுத்து விபத்தில் பலியான கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபால் திடீரென கைது செய்யப்பட்டார்.

சேலம்

மேச்சேரி:

ரூ.1 கோடி

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே வெள்ளார் ஊராட்சி எருமைப்பட்டி காட்டுவளவை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 61), ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர். தற்போது இவர் கட்டிட காண்டிராக்டராக தொழில் செய்ய முடிவு எடுத்து அதற்கு கடன் பெற முயற்சித்து வந்தார்.

இதையறிந்த எடப்பாடி அருகே உள்ள பணிக்கனூரை சேர்ந்த தனபால் (45), கொங்கணாபுரத்தை சேர்ந்த பச்சியண்ணன் ஆகிய 2 பேரும் வாசுதேவனிடம் ஒரு ரூபாய் வட்டியில் ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாகவும், அதற்கு 3 சதவீதம் தங்களுக்கு கமிஷன் கொடுத்தால் போதும் எனவும் கூறி உள்ளனர். மேலும் கடனுக்கு உங்களுடைய சொத்தான 4 ஏக்கர் நிலத்தை கிரையம் செய்து கொடுக்க வேண்டும் எனக்கூறி பேசி ஒப்புக்கொண்டனர்.

இதன் பின்பு தனபால் தரப்பினர் ஏற்பாட்டின் பேரில், சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த சசிகுமார் வாசுதேவனுடைய வங்கி கணக்குக்கு ரூ.21 லட்சத்து 77 ஆயிரம் பணத்தை செலுத்தி உள்ளார். மீதி தொகையை கிைரயம் செய்த பிறகு தருவதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் வாசுதேவன் நிலத்திற்குரிய ஆவணத்துடன் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்ற போது சசிகுமார் பெயரில் சொத்தை கிரையம் செய்து கொடுத்து விட்டார். அதன்பிறகு சசிகுமாரிடம் பணம் கேட்டதற்கு மீதம் ரூ.77 லட்சத்து 23 ஆயிரத்தை அசல் ஆவணம் வந்த பின்பு தருவதாக கூறிவிட்டு சென்றுவிட்டனர்.

கைது

அசல் ஆவணம் அவர்களுக்கு வந்த பின்பு அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதன்பின்பு சசிகுமார், அந்த நிலத்தை கொங்கணாபுரத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவருக்கு கிரைய ஒப்பந்தம் செய்து கொடுத்து விட்டார். இதன் பின்பு மேலும் 2 பேருக்கு விற்கிற உடன்படிக்கை ஒப்பந்தம் செய்து கொடுத்து விட்டார். பின்பு கடைசியாக மேச்சேரியை சேர்ந்த சசிகுமார், ரவி, சேகர் ஆகிய 3 பேருக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளார்.

இதையடுத்து சசிகுமார், ரவி, சேகர் ஆகிய 3 பேரையும் மேச்சேரி போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் நேற்று எடப்பாடி சமுத்திரம் பணிக்கனூரை சேர்ந்த தனபாலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனபால், கோடநாடு கொலை சம்பவத்ைத அடுத்து நடந்த விபத்தில் பலியான கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story