கந்திகுப்பத்தில் விண்ணரசி அன்னை தேவாலய தேர்த்திருவிழா
கந்திகுப்பத்தில் விண்ணரசி அன்னை தேவாலய தேர்த்திருவிழா நடந்தது.
பர்கூர்:
கிருஷ்ணகிரியை அடுத்த கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள தூய விண்ணரசி அன்னை தேவாலய தேர்த்திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் கோவை, வேலூர், சேலம், பெங்களூரு உள்பட பல்வேறு மறைமாவட்ட குருக்கள் தலைமையில் நவநாள் திருப்பலி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான விண்ணரசி அன்னையின் தேர் பவனி நேற்று முன்தினம் இரவு விமரிசையாக நடந்தது. முன்னதாக காலை தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இரவு அன்னையின் அலங்கரிக்கப்பட்ட தேரினை அருட்தந்தை ஜார்ஜ் மந்திரித்து, பவனியை தொடங்கி வைத்தார். தேவாலய வளாகத்தில் தொடங்கிய பவனி கந்திகுப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள் வழியாக சென்று மீண்டும் நள்ளிரவு தேவாலயம் வந்தடைந்தது. பவனியில் பர்கூர், கிருஷ்ணகிரி மற்றும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.