கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; மீனவர் பலி


கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; மீனவர் பலி
x

கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; மீனவர் பலி

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி பெரியார் நகரை சேர்ந்தவர் மரியதாசன் (வயது 63). மீனவா். இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த பீட்டர் (45) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சை்கிளை பீட்டர் ஓட்டினார். மரியதாசன் பின்னால் அமர்ந்திருந்தார். கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை ரெயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். உடனே அப்பகுதியில் நின்றவர்கள் அவர்களை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் மாியதாசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். பீட்டருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் கன்னியாகுமரி சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் மூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story