பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார்


பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து  டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 3 Oct 2022 6:45 PM GMT (Updated: 2022-10-04T00:15:25+05:30)

பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்தில் டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார்.

விழுப்புரம்


விழுப்புரம்,

திருக்கோவிலூரில் இருந்து விழுப்புரம் நோக்கி நேற்று அதிகாலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரை கண்டாச்சிபுரம் தாலுகா அருமலை கிராமத்தை சேர்ந்த இளையராஜா (வயது 39) என்பவர் ஓட்டிச்சென்றார். இந்த கார் விழுப்புரம் அருகே பெரும்பாக்கம் என்ற இடத்தில் வந்த போது பின்னால் வந்த லாரி ஒன்று அந்த காரை முந்திச்செல்ல முயன்றது.

இதனால் லாரிக்கு வழிவிடுவதற்காக இளையராஜா, காரை இடதுபுறமாக திருப்பினார். இதில் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் இளையராஜா காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து குறித்த புகாரின்பேரில் காணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story