சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து


சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து
x

தாழையூத்து அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் 5 பேர் காயம் அடைந்தனர்

திருநெல்வேலி

தாழையூத்து:

ஆந்திரா மாநிலம் கடப்பா புலிவேந்தலாமல்லில் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணரெட்டி மகன் நாகிரெட்டி (வயது 40). இவர் அதே பகுதியை சேர்ந்த ராமானுஜம் (42), மோகன் ரெட்டி (57), பவன்குமார் (32), பிரதாப் (32) ஆகியோருடன் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்றுவிட்டு நாகர்கோவிலில் இருந்து மதுரைக்கு காரில் புறப்பட்டு வந்தனர்.

நெல்லை தாழையூத்து அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தாழையூத்து போலீசார் மற்றும் அந்தப்பகுதி பொதுமக்கள் விபத்தில் காயம் அடைந்த 5 பேரையும் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story