கார் கவிழ்ந்து விபத்து


கார் கவிழ்ந்து விபத்து
x

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நீலகிரி

குன்னூர்,

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 45). இவருடைய மனைவி நிர்மலா ஜூலியட் (44), ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் இன்குலேட்டா (16), மகன் செலின் (12). இவர்கள் 5 பேரும் ஊட்டிக்கு காரில் சுற்றுலா வந்தனர். பின்னர் ஊட்டியை சுற்றி பார்த்துவிட்டு, பல்லடத்திற்கு புறப்பட்டனர்.


இவர்கள் வந்த கார் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் சென்றுகொண்டிருந்தது. கே.என்.ஆர்.நகர் அருகே வந்தபோது கார் திடீரென கடடுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாது. கார் மரத்தின் இடையில் சிக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


காரில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி லேசான காயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story