மதுராந்தகம் அருகே 20 அடி ஆழ பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - 3 பேர் உயிரிழப்பு


மதுராந்தகம் அருகே 20 அடி ஆழ பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - 3 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 16 Aug 2023 8:51 AM IST (Updated: 16 Aug 2023 11:22 AM IST)
t-max-icont-min-icon

மதுராந்தகம் அருகே 20 அடி ஆழ பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மதுராந்தகம்,

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அய்யனார் கோவில் என்ற இடத்தில் ராமநாதபுரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் இன்று காலை ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 20 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை அடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த மதுராந்தகம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இவர்கள் யார் எங்கிருந்து வருகிறார்கள்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story