பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 6 பேர் காயம்


பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 6 பேர் காயம்
x

கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் காயம் அடைந்தனர்.

கரூர்

விபத்து

சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல் பகுதியில் இருந்து கரூர் நோக்கி 2 குழந்தைகள், 2 பெண்கள், ஒரு ஆண் என 5 பேர் ஒரு காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது காரை ஆண் ஒருவர் ஓட்டி வந்து கொண்டிருந்தார். கார் மலையம்பாளையம் பிரிவு சாலை அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. பின்னர் சாலை ஓரம் இருந்த 2 தடுப்புகள் மீது மோதியதில் கார் சுமார் 7 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் மற்றும் அருகாமையில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து காரின் இடிபாடுகளில் சிக்கிய 5 பேரையும் மீட்டனர். மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலத்த காயமடைந்தார். அவரை ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை

அதேபோல் விபத்தில் காரில் பயணம் செய்த பெண் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் 4 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து விபத்து நடந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் காயம் அடைந்தவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் உடனே தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story