வேடசந்தூர் அருகே 15 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - 2 பேர் படுகாயம்


வேடசந்தூர் அருகே 15 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - 2 பேர் படுகாயம்
x

வேடசந்தூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

வேடசந்தூர்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்-கரூர் ரோட்டில் உள்ள ரங்கநாதபுரம் அருகே சிவகாசியிலிருந்து கரூரை நோக்கி அதி வேகமாக சென்று கொண்டிருந்த கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர 15 அடி பள்ளத்திற்குள் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் காரில் இருந்த 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்களை அப்பகுதியினர் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்த அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story