நடுவட்டம் அருகே நடுரோட்டில் கார் கவிழ்ந்தது -சுற்றுலா பயணி படுகாயம்


நடுவட்டம் அருகே நடுரோட்டில் கார் கவிழ்ந்தது -சுற்றுலா பயணி படுகாயம்
x
தினத்தந்தி 9 Jun 2023 12:15 AM IST (Updated: 9 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நடுவட்டம் அருகே நடுரோட்டில் கார் கவிழ்ந்தது -சுற்றுலா பயணி படுகாயம்

நீலகிரி

கூடலூர்

கர்நாடக மாநிலம் மைசூரு பகுதியை சேர்ந்தவர் சாமி (வயது 50). தனது காரில் குடும்பத்தினருடன் ஊட்டிக்கு சுற்றுலா வந்தார். பின்னர் நேற்று மாலை 3 மணிக்கு ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக மைசூருக்கு புறப்பட்டுச் சென்றார்.

காரை சாமி ஓட்டிச்சென்றார். அப்போது டி. ஆர். பஜார் அருகே திடீரென கார் ரோட்டில் கவிழ்ந்தது. இதில் தலையில் சாமி பலத்த காயமடைந்தார். மேலும் 2 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். பின்னர் காயமடைந்தவர்கள் நடுவட்டம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். தகவல் அறிந்த நடுவட்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் கூடலூர்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story