தொழில் மேம்பாட்டு கருத்தரங்கம்


தொழில் மேம்பாட்டு கருத்தரங்கம்
x

தொழில் மேம்பாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.

சிவகங்கை

இளையான்குடி

இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல் துறை மற்றும் கல்லூரி உள்தர மேம்பாட்டு செல் இணைந்து" உயர்கல்வியில் தொழில் முனைவு மேம்பாட்டு திறன்" எனும் தலைப்பில் பயிற்சி கருத்தரங்கை நடத்தியது. வணிகவியல் துறை தலைவர் நைனா முகம்மது அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான் தலைமை தாங்கினார்.. உதவி பேராசிரியர் சம்சுதீன் இப்ராஹிம் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

சிறப்பு விருந்தினராக திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் வணிகவியல் மற்றும் வணிக மேலாண்மை துறை டீன் மேலாண்மை துறை தலைவர் சந்திரமோகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கல்லூரி உள்தர மேம்பாட்டு செல் ஒருங்கிணைப்பாளர் நசீர்கான், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் அப்துல் முத்தலீப் உள்ளிட்ட துறை சார்ந்த பேராசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். மாணவ- மாணவிகள், பேராசிரியர்கள் பயிற்சி கருத்தரங்கில் கலந்து கொண்டனர். முடிவில் உதவி பேராசிரியர் ஜாகிர் உசேன் நன்றி கூறினார்.


Next Story