ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு தொழில் பாதை திட்டம்


ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு தொழில் பாதை திட்டம்
x
தினத்தந்தி 12 Sept 2023 12:15 AM IST (Updated: 12 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் தாட்கோ நிறுவனம் இணைந்து தொழில் பாதை திட்டத்தை செயல்படுத்தப்படவுள்ளது என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

சிவகங்கை

பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் தாட்கோ நிறுவனம் இணைந்து தொழில் பாதை திட்டத்தை செயல்படுத்தப்படவுள்ளது என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தொழில் பாதை திட்டம்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பாக பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாவர்களுக்கு இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐ.ஐ.டி) மற்றும் தாட்கோ நிறுவனம் இணைந்து தொழில் பாதை திட்டத்தை செயல்படுத்தபடவுள்ளது.

இந்திய தொழில்நுட்ப கழகம் முதல் முறையாக இளங்கலை தரவு அறிவியல் மற்றும் மிண்ணணு அமைப்புகள் பட்டப்படிப்பு திட்டத்தை தொடங்கியுள்ளது. இதில் பிளஸ்-2 அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பித்து 4 ஆண்டு பட்டப்படிப்பு படிக்கலாம். செப்டம்பர் 2023-ம் ஆண்டு வகுப்புகளுக்கான விண்ணப்பங்களை www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தேர்வுகள்

இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் சேர்ந்து படிப்பதற்கு இந்திய தொழில்நுட்பக் கழகம் மூலம் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் (JEE) பங்கு பெறத் தேவையில்லை. அதற்கு பதிலாக இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் தாட்கோ மூலம் அளிக்கப்படும் 4 வார பயிற்சியின் முடிவில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது.

மேலும் இத்திட்டத்தில் பயில அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். இவ்வகுப்புகள் இணையதளம் வழியாகவே நடத்தப்படும். தேர்வு மையங்களில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் ஒரே நேரத்தில் தங்களது விருப்ப பட்டப்படிப்பினை படித்துக் கொண்டே இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை படிக்கலாம்.

இத்திட்டத்தில் முறையாக 4 வருடம் படித்து முடிக்கும் மாணவர்களுக்கு இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் நேரடியாக படிப்பதற்கான கேட் தேர்வு எழுதுவதற்கான தகுதியாக ஏற்றுக் கொள்ளப்படும்.

தகுதிகள்

மாணவர்கள் பிளஸ்-2 தேர்வில் 60 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு ஆங்கிலம் மற்றும் கணித பாடத்தில் 60 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தாட்கோவில் பதிவு செய்யும் மாணவர்கள் இந்திய தொழில் நுட்பக் கழகம் நடத்தும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் மாணவர்களுக்கு தாட்கோ மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இப்படிப்பிற்கான செலவும் தாட்கோவால் வழங்கப்படும். இவ்வறு அவர் கூறியுள்ளார்.


Next Story