ஆட்டோ மீது சரக்கு வேன் மோதல்; டிரைவர் படுகாயம்


ஆட்டோ மீது சரக்கு வேன் மோதல்; டிரைவர் படுகாயம்
x

ஆட்டோ மீது சரக்கு வேன் மோதல்; டிரைவர் படுகாயமடைந்தார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கரடிகாடு பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் கோகுல். இவர் ஒரு ஆட்டோவில் இலுப்பூரில் இருந்து கீரனூர் செல்லும் சாலையில் உடையாம்பட்டி என்னும் இடத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மேலப்பட்டி அன்னைநகர் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் தர்மராஜ் என்பவர் ஓட்டி வந்த சரக்கு வேன் ஆட்டோ மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் சரக்கு வேன் கவிழ்ந்தது. ஆட்டோ அருகில் இருந்த கால்வாயில் இறங்கியது. இதில் ஆட்டோ டிரைவர் கோகுல் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story