மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதல்; கொத்தனார் பலி
அன்னவாசல் அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதி கொத்தனார் பலியானார்.
அன்னவாசல் அருகே உள்ள பெருஞ்சுனையை சேர்ந்தவர் ராசு (வயது 45), கொத்தனார். இவர் நேற்று காலை பெருஞ்சுனையில் இருந்து அன்னவாசலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மதியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த சரக்கு வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், படுகாயம் அடைந்த ராசு சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அன்னவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக சரக்கு ேவன் டிரைவர் திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த முருகன் (40) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.