சரக்கு வேன் கவிழ்ந்து 23 பேர் காயம்
சரக்கு வேன் கவிழ்ந்து 23 பேர் காயமடைந்தனர்.
துவரங்குறிச்சி:
சரக்கு வேன் கவிழ்ந்தது
வளநாடு அருகே உள்ள குறக்குறிச்சிபட்டியில் இருந்து கொடும்பபட்டி நோக்கி துக்க நிகழ்ச்சிக்காக சுமார் 25-க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு வேன் சென்றது. அருளாப்பட்டி அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சரக்கு வேன் கவிழ்ந்தது.
இதில் அந்த சரக்கு வேனில் பயணம் செசரக்கு வேன் கவிழ்ந்து 23 பேர் காயம்ய்தவர்களில் 23 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதை அறிந்த அக்கம், பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு மணப்பாறை, கொடும்பாளூர் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணைCargo van overturns, 23 injured
இதில் பலத்த காயம் அடைந்தவர்கள், அந்த மருத்துவமனைகளில் இருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.