காணை அருகேசரக்கு வாகனம் கவிழ்ந்து 7 பேர் காயம்


காணை அருகேசரக்கு வாகனம் கவிழ்ந்து 7 பேர் காயம்
x
தினத்தந்தி 29 March 2023 12:15 AM IST (Updated: 29 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காணை அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் காயமடைந்தனர்.

விழுப்புரம்

காணை,

திருவெண்ணெய்நல்லூர் தாலுகா மாரங்கியூரை சேர்ந்தவர்கள், விழுப்புரம் அருகே அத்தியூர்திருக்கை கிராமத்தில் நடந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஒரு சரக்கு வாகனத்தில் புறப்பட்டனர். வாகனத்தை திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்த அய்யப்பஅருள்ராஜ் (வயது 46) என்பவர் ஓட்டினார். இந்த வாகனம், மல்லிகைப்பட்டு என்ற இடத்தில் வந்தபோது பேரிங் திடீரென உடைந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் பயணம் செய்த சுப்பிரமணி (55), அமுதா (50), சரஸ்வதி (60), வசந்தா (60), மனோன்மணி (65), முத்தம்மாள் (59), அஞ்சலை (60) ஆகிய 7 பேர் காயமடைந்தனர். உடனே அவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்த புகாரின்பேரில் காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story