ஆட்டோவில் கர்நாடக மது பாக்கெட்டுகள் விற்றவர் கைது


ஆட்டோவில் கர்நாடக மது பாக்கெட்டுகள் விற்றவர் கைது
x

வாணியம்பாடியில் ஆட்டோவில் கர்நாடக மது பாக்கெட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சாராய ஒழிப்பு, வெளிமாநில மதுபாட்டில்கள், பாக்கெட்டுகள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் ஆட்டோவில் வைத்து கர்நாடக மது பாக்கெட் விற்பதாக வாணியம்பாடி டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அங்கு சென்று ஆட்டோவில் வைத்து மதுபாக்கெட் விற்ற பிரியகுமார் (வயது 37) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 5 லிட்டர் கர்நாடக மது பாக்கெட்டுகள், ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story