திண்டிவனம் அருகே மின்சாரம் தாக்கி தச்சு தொழிலாளி பலி


திண்டிவனம் அருகே   மின்சாரம் தாக்கி தச்சு தொழிலாளி பலி
x
தினத்தந்தி 2 Sept 2023 12:15 AM IST (Updated: 2 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே மின்சாரம் தாக்கி தச்சு தொழிலாளி பலியானார்.

விழுப்புரம்

திண்டிவனம்,

திண்டிவனம் அருகே உள்ள சாரம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் சரவணன் (வயது 40). தச்சு தொழிலாளியான இவர் நேற்று அதேஊரில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் கதவு செய்வதற்காக டிரில்லர் எந்திரத்துக்கு ஒயர் மூலம் மின் இணைப்பு கொடுத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சரவணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மின்சாரம் தாக்கி பலியான சரவணனுக்கு சத்யா (32) என்ற மனைவியும் ஆர்த்தீஸ்வரி (12) என்ற மகளும், வர்னேஷ் (10) என்ற மகனும் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story