மின்சாரம் தாக்கி தச்சுத்தொழிலாளி பலி
வந்தவாசி அருகே மின்சாரம் தாக்கி தச்சுத்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
திருவண்ணாமலை
வந்தவாசி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 45). தச்சுத்தொழிலாளி.
இவர் இன்று காலை வேலைக்காக வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் கூட்ரோடு அருகே வயல்வெளி வழியாக நடந்து சென்றுள்ளார்.
அப்போது செல்வராஜ் என்பவரது நிலத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கியதில் வீரமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுபற்றி தகவலறிந்து அங்கு சென்ற பொன்னூர் போலீசார் வீரமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து பொன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story