தர்மபுரி உழவர் சந்தைக்கு வரத்து அதிகரிப்பால் கேரட் விலை வீழ்ச்சி


தர்மபுரி உழவர் சந்தைக்கு வரத்து அதிகரிப்பால் கேரட் விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 15 July 2023 7:30 PM GMT (Updated: 15 July 2023 7:30 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி, ஜூலை.16-

தமிழகம் முழுவதும் தக்காளி, சின்னவெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் தர்மபுரி மாவட்டத்திலும் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. மாவட்டத்தில் கேரட் விலை வழக்கத்தை விட அதிகரித்தது. கடந்த வாரத்தில் 1 கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் தர்மபுரி உழவர் சந்தையில் 1 கிலோ ரூ.72-க்கு விற்பனையான கேரட் நேற்று ஒரே நாளில் 1 கிலோவிற்கு ரூ.12 குறைந்தது. தர்மபுரி உழவர் சந்தையில் விலை வீழ்ச்சியால் நேற்று 1 கிலோ கேரட் ரூ.60-க்கு விற்பனையானது. வெளிமார்க்கெட்டுகளில் கேரட் ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டது. கேரட் வரத்து அதிகரித்ததால் அதன் விலை குறைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.



Next Story