கார்கள் மோதல்; 6 பேர் படுகாயம்


கார்கள் மோதல்; 6 பேர் படுகாயம்
x

கார்கள் மோதிக்கொண்டதில் 6 பேர் படுகாயமடைந்தனர்.

அரியலூர்

ஆண்டிமடம்:

கடலூர் மாவட்டம், நெய்வேலி திடீர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார்(வயது 68). இவரும், இவரது உறவினர்கள் மீரா(58), நந்தினி(40), அபினேஷ் விநாயக் (10) ஆகியோரும் நெய்வேலியில் இருந்து அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கவரப்பாளையம் கிராமத்திற்கு ஒரு காரில் புறப்பட்டு வந்தனர். விருத்தாசலம்-ஆண்டிமடம் தேசிய நெடுஞ்சாலையில் ராங்கியம் கிராமம் அருகே வந்தபோது ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் காருக்கு டீசல் போடுவதற்காக திரும்பியபோது, எதிரே வந்த மற்றொரு கார் எதிர்பாராதவிதமாக ரவிக்குமாரின் கார் மீது மோதியது. இதில் 2 கார்களும் சேதமடைந்தன. மேலும் காரில் இருந்த ரவிக்குமார் உள்ளிட்டோரும், மற்றொரு காரில் வந்த சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் நடுத்தெருவை சேர்ந்த ரவிக்குமார்(45), வாழப்பாடி பாலாஜி நகர் மணிகண்டன்(40) ஆகியோரும் பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது பற்றி தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு போக்குவரத்தை சீர் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story