கார்கள் மோதல்; 7 பேர் படுகாயம்


கார்கள் மோதல்; 7 பேர் படுகாயம்
x

அன்னவாசல் அருகே கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் படுகாயமடைந்தனர்.

புதுக்கோட்டை

கார்கள் மோதல்

புதுக்கோட்டை அடப்பன்வயல் பகுதியை சேர்ந்தவர் சர்புதீன் (வயது 45). இவர், ஒரு காரில் புதுக்கோட்டையில் இருந்து பரம்பூரில் நடக்கும் வாரச்சந்தைக்கு சம்சா வியாபாரம் செய்வதற்காக சென்று கொண்டிருந்தார். அந்த காரில் அடப்பன்வயலை சேர்ந்த ரபீக் (51), உபயத்துல்லா (40), கறம்பக்குடியை சேர்ந்த ரஜாக் (50) ஆகியோரும் சென்றுள்ளனர். விசலூர் விளக்கு என்னும் இடத்தில் கார் வந்தபோது, எதிரே ஆலங்குடியை சேர்ந்த மணி என்பவர் ஓட்டி வந்த கார், சர்புதீன் ஓட்டி வந்த கார் மீது மோதியது.

7 பேர் படுகாயம்

இதில் காரில் பயணம் செய்த மணி மற்றும் அவருடன் வந்த மல்லிகா, தனலட்சுமி மற்றும் சர்புதீன், ரபீக், உபயத்துல்லா, ரஜாக் ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story