17 வயது சிறுமி கடத்தல்; வாலிபர் மீது வழக்கு


17 வயது சிறுமி கடத்தல்; வாலிபர் மீது வழக்கு
x
தினத்தந்தி 6 Aug 2023 12:30 AM IST (Updated: 6 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பொம்மிடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இவருடைய தந்தை கோவையில் கட்டிட வேலைக்கு சென்றுவிடுவார். இதன் காரணமாக சிறுமி தனது அத்தையின் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் உறவினர்கள் தந்தைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர் பொம்மிடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் தனது மகளை பொம்மிடி அருகே பொ.துரிஞ்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்த வாசு மகன் சிலம்பரசன் (வயது 21) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.


Next Story